மயிலாடுதுறை
அபிராமி அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனை
|திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.
திருக்கடையூர்;
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அபிராமி அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனையும் 108 கலசங்கள் வைத்து யாக பூஜையும் நடந்தது. பின்னர் புனித நீரை ஊற்றி அபிராமி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் கணேச குருக்கள், ஆனந்த குருக்கள், சண்முகசுந்தர குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கிள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணங்குடியில் உள்ள சீதால தேவி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நிறை மணி அய்யனார் கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று சீதால தேவி மாரியம்மன் கோவிலை அடைந்து சாமி தரிசனம் செய்தனா். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.