< Back
ஆன்மிகம்
பவானி ஆற்றில் பண்ணாரி மாரியம்மன் படகில் உலா
ஆன்மிகம்

பவானி ஆற்றில் பண்ணாரி மாரியம்மன் படகில் உலா

தினத்தந்தி
|
15 March 2024 1:33 PM IST

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டத்தில் பக்தர்கள் தீ மிதிக்கும் விழா 26ம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோயிலில் வருடம் தோறும் குண்டம் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். முக்கிய நிகழ்வாக குண்டத்தில் தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் தமிழ்நாட்டின் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களும், கர்நாடகா, மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்களும் குண்டத்தில் வந்து நேர்த்தி கடனுக்காக தீமிதிக்கு அம்மனை வணங்கி செல்வார்கள்.

கடந்த 11ஆம் தேதி பூச்சாற்றுகளுடன் விழா தொடங்கியது. கடந்த 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பன்னாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் ஆகிய இரண்டு அம்மன்களையும் சப்பரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் சப்பரத்தை தூக்கி செல்வார்கள். தாரை தப்பட்டை முழங்க அன்று இரவு சிக்கிரம் பாளையம் அம்மன் வந்து வீதிகள் தோறும் அம்மனின் உலா நடைபெற்றது. அதன் பிறகு இரவு அங்குள்ள அம்மன் கோயிலில் தங்க வைக்கப்பட்டது.

13ஆம் தேதி சிக்கரசம்பாளையத்தில் அம்மன் சப்பரம் உலா சென்று இரவு அம்மனின் சப்பரம் இக்கரை நெகமம்புதூர் வந்தது. அந்த கிராமங்கள் முழுவதும் வீதி வீதியாக அம்மன் உலா நடைபெற்றது. அதன் பிறகு இரவு இக்கரை நெகமும்புதூரில் மாரியம்மன் கோவிலில் சப்பரம் இரவு தங்க வைக்கப்பட்டது. 14ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் வெள்ளியம்பாளையம் சப்பரம் வந்தடைந்தது. அங்குள்ள வீதிகள் தோறும் அம்மனின் உலா சென்று மாலை கொத்தமங்கலம் வழியாக பவானி ஆற்றை நாட்டு படகுமூலம் கடந்து தொட்டம்பாளையத்திற்க்கு வந்தடைந்தது.

பவானி ஆற்றை கடக்கும்போது சப்பரம் ஒன்றில் பூசாரி, சக்கர குடை.யும், மற்றொரு நாட்டு படகில் சந்திரபானம், சூரிய பானம் மற்றும் இசைக்கலைஞர்கள், ஆகியோர் வந்தார்கள். இரவு தொட்டம்பாளையத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோயிலில் சப்பரம் தங்க வைக்கப்பட்டது.

இன்று 15ம் தேதி வெள்ளியம்பாளையம் புது ஊருக்கு வந்து அதன் பிறகு இரவு அக்கறை தத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில் சப்பரம் தங்க வைக்கப்படும். வரும் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை கம்பம்சாட்டும் விழாவும், முக்கிய நிகழ்வான குண்டத்தில் பக்தர்கள் தீ மிதிக்கும் விழா 26ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கும் நடைபெறும்.

வரும் 27ம் தேதி புதன்கிழமை பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளுமபவுர்ணமி திருவிளக்கு பூஜை மாலை 6 மணிக்கு நடைபெறும். 28ந்தேதி வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். 29ம் தேதி வெள்ளிக்கிழமை தங்கத் தேர் புறப்பாடு நடைபெறும். ஏப்ரல் 1ம் தேதி திங்கட்கிழமை மறுபூஜை நடைபெறும். விழாவிற்கு வேண்டிய ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் பரம்பரை அரங்காவலர்களும் பணியாளர்களும் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்