< Back
ஆன்மிகம்
தொடங்கியது அக்னிநட்சத்திரம் - திருப்பதி  கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்
ஆன்மிகம்

தொடங்கியது அக்னிநட்சத்திரம் - திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்

தினத்தந்தி
|
4 May 2024 9:41 AM IST

கோடை விடுமுறையில் திருமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

திருமலை,

திருப்பதியில் உள்ள திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் கட்டிடத்தில் டயல் யுவர் இ.ஓ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று கேட்ட கேள்விகளுக்கு கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டி பதில் அளித்தார். அப்போது திருமலை தேவஸ்தானம் வழங்கும் தரிசனம், தங்குமிடம், உணவு மற்றும் இதர வசதிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர். இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில் கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டி கூறியதாவது:-

கோடை விடுமுறையில் திருமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள் பக்தர்களுக்கு வழங்கப்படும். கோவில் வீதிகளில், பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் அனைத்திலும் வெயிலின் உஷ்ணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் பந்தல்கள், கூல் பெயிண்டுகள் கார்பெட்டுகள் அமைத்துள்ளோம். நாங்கள் அவ்வப்போது தண்ணீரை தரையில் தெளிக்கிறோம்.நாராயணகிரி தோட்டங்கள் மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க தற்காலிக கொட்டகைகள் அமைத்துள்ளோம்.

திருமலையில் ஆகாசகங்கா ஸ்ரீ பாலஞ்சநேயசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். அனுமன்ஜெயந்தியை முன்னிட்டு, ஆகாஷ்கங்கையில் உள்ள ஸ்ரீ பாலஞ்சநேயசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும் செய்திகள்