< Back
ஆன்மிகம்
புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
நாகப்பட்டினம்
ஆன்மிகம்

புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

தினத்தந்தி
|
5 Jun 2022 7:18 PM IST

புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

வேளாங்கண்ணி:

கருங்கண்ணியில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

புனித அந்தோணியார் ஆலயம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரை அடுத்த கருங்கண்ணியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ெதாடர்ந்து ஆலயத்தின் உள்ளே மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தால் முடி சூட்டுவிழா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.

தேர்பவனி

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பெரிய மின் அலங்கார தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

முன்னாள் மிக்கேல் ஆண்டவர், சவேரியார், அருளானந்தர், மாதா, புனித அந்தோணியார் ஆகிய சொரூபங்கள் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளி பவனி நடைபெற்றது. அப்போது வண்ண, வண்ண வாணவேடிக்கை நடந்தது.

இதில் கருங்கண்ணி பங்கு தந்தை சவரிமுத்து, கிறிஸ்தவ சமூக தலைவர் பிராண்சிஸ், துணைத்தலைவர் விக்டர் பவுல்ராஜ் மற்றும் திரளாள கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்