< Back
ஆன்மிகம்
ஆரணியில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம்
ஆன்மிகம்

ஆரணியில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம்

தினத்தந்தி
|
31 July 2022 8:50 AM IST

ஆரணியில் நடைபெற்ற திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஆரணி:

ஆரணி - ஆற்காடு நெடுஞ்சாலையில் இரும்பேட்டில் அமைந்துள்ள ஏ.சி.எஸ்.கல்வி குழுமம் சார்பாக புதிதாக கட்டி உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் திருமலை-திருப்பதி சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.

முன்னதாக திருமலையில் இருந்து உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சாமிகளை அலங்கார வாகனத்தில் கொண்டு வரப்பட்டன. இரும்பேட்டில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் திருமலை-திருப்பதி உற்சவர் பெருமாளை வைத்து தோமாலை, சுப்ரபாத சேவைகள் நடத்தப்பட்டன.

அதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணி அளவில் பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. அப்போது சீர்வரிசைகளுடன், புத்தாடைகள் சாமிகளுக்கு அணிவித்து யாக பூஜைகள் நடந்தது. கல்யாண உற்சவ பெருமாளை தரிசிக்க திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி, தமிழ்நாடு - புதுச்சேரி மாநில திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக்குழு தலைவர் ஏ.ஜே.சேகர்ரெட்டி, முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஏ.சி.எஸ். கல்விக்குழும தலைவர் ஏ.சி.சண்முகம், லலிதாலட்சுமி சண்முகம், ஏ.சி.எஸ்.அருண்குமார் உள்பட தொழிலதிபர்கள், பக்தர்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதமும், அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்