< Back
ஆன்மிகம்
ஸ்ரீ பத்மாவதி தாயார் பவித்ரா உற்சவம் பூர்ணாஹுதியுடன் நிறைவு
ஆன்மிகம்

ஸ்ரீ பத்மாவதி தாயார் பவித்ரா உற்சவம் பூர்ணாஹுதியுடன் நிறைவு

தினத்தந்தி
|
11 Sept 2022 1:39 AM IST

திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் மூன்று நாள் பவித்ரோத்ஸவம் மகாபூர்ணாஹுதியுடன் நிறைவடைந்தது.

திருமலை:

திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் மூன்று நாள் பவித்ரோத்ஸவம் நேற்று (சனிக்கிழமை) மகாபூர்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. விழாவின் ஒரு பகுதியாக, கோவிலில் கடைசி நாளான இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மகாபூர்ணாஹுதி, சாந்தி ஹோமம், கும்பப்ரோக்ஷணம், நிவேதனம் ஆகியவை சாஸ்திர ரீதியாக நடத்தப்பட்டன.

மாலை 3 மணி முதல் 5 மணி வரை ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி முக மண்டபத்தில் தாயாருடன் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பின், சக்கரத்தாழ்வாரைபத்மபுஷ்கரிணிக்கு பல்லக்கில் ஊர்வலமாகவைத்து பத்மபுஷ்கரிணிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பாரம்பரிய முறைப்படி சக்கர ஸ்நானம் செய்யப்பட்டது.

மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி, ஸ்ரீ சுந்தரராஜ சுவாமி, ஸ்ரீ பத்மாவதி தாயார் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்

மேலும் செய்திகள்