< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்: அறிந்ததும்.. அறியாததும்..
ஆன்மிகம்

ஆன்மிகம்: அறிந்ததும்.. அறியாததும்..

தினத்தந்தி
|
21 July 2022 11:41 AM GMT

இறைவனின் பக்கத்தில் நம்மை நிறுத்தும் ஆன்மிகப் பாதையைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் எவரும் இல்லை. அதில் நாம் அறிந்ததும்.. அறியாததும் நிறைய இருக்கின்றன. அவற்றில் சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வழிபாட்டு மலர்கள்

ஞாயிறு - வில்வம்

திங்கள் - துளசிப்பூ

செவ்வாய் - விளா

புதன் - மாவிலங்கம் (மாம்பூ)

வியாழன் - மந்தாரை

வெள்ளி - நாவல் இலை

சனி - விஷ்ணு கரந்தை

தெய்வங்களுக்கு தீபங்களுக்கான தெய்வங்கள்

தூபம் (ஊதுபத்தி) - அக்னி

நாக தீபம் - கேது

ரிஷப தீபம் - தர்ம தேவன்

மிருகதீபம் - விஷ்ணு

பூர்ணகும்பம் - ருத்திரன்

பஞ்சதீபம் (ஐந்து தீபங்கள்)- பஞ்ச பிரம்மாக்கள்

நட்சத்திர தீபம் - 27 நட்சத்திரங்கள்

மேரு தீபம் - 12 ஆதித்யர்கள்

விபூதி - சிவன்

கண்ணாடி - சூரியன்

குடை - சந்திரன்

சாமரம் - மகாலட்சுமி

விசிறி - வாயு

விபூதி தரிக்கும் காலம்

நீராடிய பின்னும், இறை நாமங்களை உச்சரிக்கும் முன்பும், ஹோமங்கள் செய்யும் போதும், விரத காலங்களிலும், தானம் கொடுக்கும் முன்பும், உபதேசம் பெறும் முன்பும், தீட்சை பெறும் சமயத்திலும் நிச்சயமாக சிவச் சின்னமான விபூதியைத் தரிக்க வேண்டும்.

சூதகம் எனும் தீட்டுக் காலங்களில் விபூதியைத் தரிக்கக் கூடாது.

கட்டைவிரல், நடுவிரல், மோதிர விரல் - இந்த மூன்று விரல்களாலும் விபூதியைத் தரிப்பது சிவபெருமானின் பேரருளை விரைவில் கிடைக்கச் செய்யும்.

ஆலய வலம் வருவதன் பலன்

காலை - நோய் நீங்கும்

மதியம் - வேண்டும் வரம் கிடைக்கும்

மாலை - பாபங்கள் அகலும்

இரவு - மோட்சம் கிடைக்கும்

ஆலயத்தின் கதவுகள் சாத்தியுள்ளபோதும், அபிஷேக காலத்திலும், கால பூஜைகள் நடக்கும்போதும், சுவாமி வீதியுலா வரும்போதும் ஆலயத்தை வலம் வரக்கூடாது. இரு கைகளையும் தொங்கப் போட்டுக்கொண்டு வலம் வருவதும் கூடாது.

விநாயகரை ஒரு முறையும், சூரியனை இரு முறைகளும், சிவனை மூன்று முறைகளும், அம்பிகையையும், விஷ்ணுவையும் நான்கு முறைகளும், அரச மரத்தை ஏழு முறைகளும் வலம் வர வேண்டும்.

சிவாலய வாத்திய பலன்கள்

மத்தளம் - இன்பம் வந்துசேரும்

தாளம் - துக்கம் நீங்கும்

படஹம் - பாவம் அகலும்

பேரி - மகிழ்ச்சி உண்டாகும்

டமருகம் - சுக அனுபவம் வாய்க்கும்

சங்கு - விரோதம் நீங்கும்

நர்த்தனம் - தானிய அபிவிருத்தி

நாதஸ்வரம் - வம்ச அபிவிருத்தி

கடம் - மோட்சம் கிடைக்கும்

ருத்ராட்சத்திற்குரிய தெய்வங்கள்

சிவபெருமானின் கண்ணில் இருந்து தோன்றியதாக புராணங்கள் சொல்லும் ருத்ராட்சம், சிவச் சின்னங்களில் முக்கியமானது. இதை தரித்துக் கொண்டவர்களுக்கு, சிவபதவி கிடைக்கும் என்பதும் ஐதீகம். ஒன்று முதல் 13 வரையான முகம் கொண்ட ருத்ராட்சங்களுக்குரிய தெய்வங்களை இங்கே பார்க்கலாம்.

1 முகம் - சிவன்

2 முகம் - சிவன்

3 முகம் - அக்னி

4 முகம் - பிரம்மா

5 முகம் - ருத்திரன்

6 முகம் - முருகப்பெருமான்

7 முகம் - ஆதிசேஷன்

8 முகம் - கணபதி

9 முகம் - பைரவர்

10 முகம் - விஷ்ணு

11 முகம் - ஏகாதச ருத்திரர்கள்

12 முகம் - பன்னிரு ஆதித்யர்கள்

13 முகம் - முருகப்பெருமான்

மேலும் செய்திகள்