< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்: அறிந்ததும்.. அறியாததும்..
ஆன்மிகம்

ஆன்மிகம்: அறிந்ததும்.. அறியாததும்..

தினத்தந்தி
|
12 July 2022 11:06 AM GMT

அள்ள அள்ளக் குறையாத ஆனந்தக் கடல், ஆன்மிகம். அதனை நாம் அறிந்து வைத்திருப்பது மிகவும் குறைவுதான். ஆன்மிகத்தில் கரைகண்டவர்கள் இந்த பிரபஞ்சத்திலேயே எவரும் இல்லை. நாம் அறியாத சில விஷயங்களை இங்கே சிறு குறிப்பாக பார்க்கலாம்.

பூக்களும்.. பூஜையும்..

சிவபெருமானை வழிபடும்போது, நேரத்திற்கு தகுந்தாற்போல் பூக்களைக் கொண்டு வழிபட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

காலை: தாமரைப் பூ, பூவரசம்பூ, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னை, தாழை.

மதியம்: வெண்தாமரை, அரளி, பூவரசம்பூ, நெய்தல், வில்வம், சங்கு புஷ்பம், மருதாணிப்பூ, கோவிதாரம், ஓரிதழ்த் தாமரை.

மாலை: செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிப்பூ, முல்லை, மரிக்கொழுந்து, வெட்டி வேர், கஜகர்ணிகை, வில்வம்.

சிவனின் பஞ்சமுக நைவேத்தியம்

ஈசானம் - சுத்தான்னம்

தத்புருஷம்- சர்க்கரைப் பொங்கல்

அகோரம் - எள் சாதம்

வாமதேவம் - தயிர்சாதம்

சத்யோஜாதம் - பொங்கல்

(மேற்கண்ட ஐந்து நிவேதனங்களையும் ஒருங்கே செய்தல் மிகவும் சிறப்பான பலன் தரக்கூடியது)

மாத பவுர்ணமியும்.. வழிபாட்டு பூக்களும்..

சிவபெருமானை ஒவ்வொரு மாத பவுர்ணமி தினத்திலும் வழிபடுகையில், அந்த மாதத்திற்கான மலர்களை சமர்ப்பித்து வழிபட்டால் பலன்கள் இரட்டிப்பாகும்.

சித்திரை - முல்லை, மரிக்கொழுந்து

வைகாசி - அலரி, நெய்தல், செம்பருத்தி, செந்தாமரை, பாதிரி

ஆனி - தாமரை, செண்பகம்

ஆடி - ஊமத்தை, கருநெய்தல்

ஆவணி - விஷ்ணு கரந்தை, மல்லிகை, புன்னை

புரட்டாசி - வெள்ெளருக்கு, தாமரை

ஐப்பசி - சங்குப்பூ, வில்வப்பூ, கொன்றை, மகிழம்பூ, மல்லிகை

கார்த்திகை - மல்லிகை, பாக்குப்பூ

மார்கழி - வெண்தாமரை, செந்தாமரை

தை - நந்தியாவட்டை, தாமரை

மாசி - மகிழம்பூ, மருதாணி, மல்லிகை

பங்குனி - கொக்கிறகு, தாமரை, காசித் தும்பை

அபிஷேக பலன்

சிவபெருமானை எந்தந்த திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

சுத்தமான நீர் - மன அமைதி

தைலம் - இன்பம்

பஞ்சாமிர்தம் - முக்தி

பால் - நீண்ட ஆயுள்

தயிர் - குழந்தைப் பேறு

அரிசி மாவு - கடன் நீங்கும்

மஞ்சள் - ராஜ வசியம்

கரும்புச் சாறு - ஆரோக்கியம்

எலுமிச்சை - எம பயம் நீக்கும்

அன்னாபிஷேகம் - விவசாயம் செழிக்கும்

தர்பை கலந்த தீர்த்தம் - ஞானம்

விபூதி - சகல ஐஸ்வர்யம்

சந்தனம் - பெரும் செல்வம்

சங்காபிஷேகம் - சகல பாபங்களும் நீங்கும்

சப்த விடங்க தலங்கள்

'விடங்க' என்பதற்கு 'உளியால் செதுக்கப்படாதது' என்று பொருள். உளியால் செதுக்கப்படாத மூலவரைக் கொண்ட 7 ஆலயங்கள், 'சப்த விடங்க தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றறன. அவை,

1. திருநள்ளாறு

2. திருநாகைக்காரோணம்

3. திருவாரூர்

4. திருக்காராவில்

5. திருக்கோளிலி

6. திருவாய்மூர்

7. திருமறைக்காடு

மேலும் செய்திகள்