< Back
ஆன்மிகம்
திருவாரூர்
ஆன்மிகம்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
|21 Aug 2022 11:57 PM IST
ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தன.
நீடாமங்கலம்-தஞ்சை சாலை அருகே எழுந்தருளியுள்ள முச்சந்தியம்மன் கோவில் திருவிழா ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் சக்தி கரகம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நடந்தது. மாலை நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், வாண வேடிக்கையும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அங்காள பரமேஸ்வரி
இதேபோல கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றன. அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், வில்வபொடி, மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு வண்ண மலர்களாலும், வளையல்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.