நாகப்பட்டினம்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
|ஆடி கடைசி வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் தினேஷ் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் கோவில் வளாகம், சுவாமி வீதியுலா செல்லும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சாமி வீதியுலா
பின்னர், உபயதாரர்கள் சார்பில் தினந்தோறும் மண்டகப்படி நடத்தப்பட்டு சாமி வீதியுலா நடந்தது. நேற்று ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மனுக்கு பாஸ்கர சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இரவு காளியம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றார். வேதாரண்யம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கன்னிகா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சமயபுரத்து மாரியம்மன்
இதேபோல, தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திட்டச்சேரி
திட்டச்சேரி வெள்ளத்திடல் மகா மாரியம்மன் கோவில், தைக்கால்தெரு காளியம்மன் கோவில், திருமருகல் மாரியம்மன் கோவில், திருக்கண்ணபுரம் மாரியம்மன் கோவில், அகரக்கொந்தகை பிடாரி அம்மன் கோவில், பண்டாரவடை மாரியம்மன் கோவில், வாழ்மங்கலம் வீரமாகாளி அம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் ஆடிமாத கடைசிவெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.