< Back
ஆன்மிகம்
பெருமாள்-ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
மயிலாடுதுறை
ஆன்மிகம்

பெருமாள்-ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
9 Oct 2022 12:15 AM IST

பெருமாள்-ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருவாளி, திருநகரி, அண்ணன் பெருமாள் கோவில், பல்லவணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நாங்கூரில் 11 பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருகுரவலூர், மங்கை மடம், திருநகரி மற்றும் திருவாளியில் உள்ள பஞ்ச நரசிம்மர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்