< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
சங்கடகர சதுர்த்தியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சிறப்பு ஹோமம்
|15 Sept 2022 6:16 AM IST
சங்கடகர சதுர்த்தியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சிறப்பு ஹோம பூஜைகள் நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று சங்கடகர சதுர்த்தியையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அஞ்சி விநாயகர் சன்னதியில் சிறப்பு ஹோம பூஜைகள் நடந்தது.
முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் ஆகம விதிப்படி ஹோம குண்டத்தை ஏற்பாடு செய்து, அதில் சிறப்பு ஹோமத்தை வளர்த்தனர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹூதி நடத்தினர்.
சிறப்பு ஹோம பூஜையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, கோவில் இணை ஆணையாளர் மல்லிகார்ஜுன் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.