< Back
ஆன்மிகம்
தஞ்சை மூலை அனுமாருக்கு 10,008 எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம்
தஞ்சாவூர்
ஆன்மிகம்

தஞ்சை மூலை அனுமாருக்கு 10,008 எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
28 July 2022 8:08 PM GMT

தஞ்சை மூலை அனுமாருக்கு 10,008 எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம்

தஞ்சை மேலவீதியில் பிரதாப வீர ஆஞ்சநேயர் எனப்படும் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. சிறப்புகள் வாய்ந்த தஞ்சை மூலை அனுமார் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் ராமநாம ஜெபமும், அதனைத்தொடர்ந்து வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாக்கும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மாலையில் 10 ஆயிரத்து 8 எலுமிச்சை பழங்களால் ஆன சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6.30 மணிக்கு புகழ்பெற்ற அல்லல் போக்கும் 18 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்