< Back
ஆன்மிகம்
முருகனின் ஆறு முகங்கள்
ஆன்மிகம்

முருகனின் ஆறு முகங்கள்

தினத்தந்தி
|
5 May 2023 2:28 PM IST

"முருகு, முருகு என்று சொல்லி தினமும் உருகு, உருகு" என்று வாரியார் சுவாமிகள் சொல்வார். அந்த முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் உரிய விளக்கம்.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் - மழலை முகம்

ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் - ஞான முகம்

கூறும் அடியார் வினை தீர்க்கும் முகம் - அருள் முகம்

குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் - வீர முகம்

மாறுபடு சூரரை வதைத்த முகம் - வெற்றி முகம்

வள்ளியை மனம்புணர வந்தமுகம் - அன்பு முகம்

'முருகு' என்றால் 'அழகு', 'இளமை' என்று பொருள். முருகனை வணங்கினால் நமக்கு அழகும், இளமையும் கிடைக்கும். அவரது ஆறு முகங்களையும் கண்டுகளித்தால் ஞானம், வீரம், வெற்றி, அன்பு, ஆற்றல், அருள் அனைத்தும் கிடைக்கும்.

தொகுப்பு- சிவல்புரி சிங்காரம்.

மேலும் செய்திகள்