< Back
ஆன்மிகம்
Hanumath Jayanti at Akashaganga
ஆன்மிகம்

அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்.. ஆகாசகங்கை பால ஆஞ்சநேயருக்கு பிடித்தமான செந்தூர அர்ச்சனை

தினத்தந்தி
|
6 Jun 2024 5:23 PM IST

ஆகாசகங்கையில் அமைந்திருக்கும் குகையில்தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என பல்வேறு புராணங்களின் அடிப்படையில், தேவஸ்தான ஆய்வுக் குழுவினர் உறுதிபட கூறி உள்ளனர்.

திருமலை:

திருப்பதி மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயரின் அவதாரத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆஞ்சநேயர் அவதரித்ததாக கருதப்படும் ஆகாசகங்கை குகையில் பால ஆஞ்சநேயர், ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனா தேவி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருமலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் ஒரு பகுதியாக, ஆகாசகங்கையில், தாய் அஞ்சனா தேவியுடன் கூடிய ஸ்ரீ பால ஆஞ்சநேய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் நிறைவு நாளான நேற்று சிறப்பு அபிஷே ஆராதனை நடைபெற்றது. குறிப்பாக, பால ஆஞ்சநேயருக்கு பிடித்தமான செந்தூர அர்ச்சனை நடைபெற்றது. அதன்பின்னர் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ பால ஆஞ்சநேயருக்கு புஷ்பார்ச்சனை மற்றும் துளசி அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் பால ஆஞ்சநேய சுவாமிக்கும், சுதர்சன சக்கரத்துக்கும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் கோவில் பூசாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பதி திருமலையில் உள்ள ஆகாசகங்கையில் அமைந்திருக்கும் குகையில்தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என பல்வேறு புராணங்களின் அடிப்படையில், தேவஸ்தான ஆய்வுக் குழுவினர் உறுதிபட கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்