< Back
ஆன்மிகம்
ஸ்ரீ கம்பராய பெருமாள் அண்ணனுக்கு சீர்வரிசை
ஆன்மிகம்

ஸ்ரீ கம்பராய பெருமாள் அண்ணனுக்கு சீர்வரிசை

தினத்தந்தி
|
28 July 2023 9:15 PM IST

தேனி மாவட்டம் கம்பம் நகரில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீ கம்பராய பெருமாள், சாமுண்டி அம்மனுக்கு அண்ணன் முறையாகும்.

ஆனி மாதம் பெருமாள் கோவிலில் திருவிழா தொடங்கும். முதல்நாள் கொடியேற்றம் அன்று அண்ணனுக்கு சீர் செய்வதற்காக அங்கு எழுந்தருள்வாள் சாமுண்டி அம்மன். நிறைவு நாளன்று அண்ணனுக்கு சீர்செய்யும் அம்மன், பதில் சீர் தரும்படி கேட்க, பெருமாள் கோவிலில் இருந்து சாமுண்டி அம்மனுக்குப் பதில் சீர் தரப்படுகிறது. ஆனால் அது தனக்குப் போதாது என்று கோபித்துக் கொண்டு அம்மன், தனது ஆலயத்துக்கு திரும்புகிறாள். சகோதர - சகோதரி உறவின் உன்னதத்தையும், அவர்களுக்கு இடையேயான உரிமைகளின் சிறப்பையும் தெய்வத்தை முன்னிலைப்படுத்தி விளக்கும் இந்த வைபவத்தை வாழ்வில் ஒரு முறையேனும் நாம் தரிசிக்கவேண்டும்.

மேலும் செய்திகள்