< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவில்: பச்சைப்பட்டினி விரதம்
|21 March 2023 3:16 PM IST
சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆலயத்தில், மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று நடைெபறும் ‘பச்சை பட்டினி விரதம்’ என்பது சிறப்புக்குரியது.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சமயபுரம் மாரியம்மன் கோவில். மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த ஆலயத்தில், மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று நடைெபறும் 'பச்சை பட்டினி விரதம்' என்பது சிறப்புக்குரியது. உலக நன்மைக்காக இத்தல மாரியம்மன், இந்த விரதத்தை மேற்கொள்வதாக ஐதீகம். இந்த விரதம் 28 நாட்கள் நீண்டது. இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை (சமைத்த உணவுப் பொருட்கள்) நைவேத்தியமாகப் படைக்கப்படாது. அதற்குப் பதிலாக துள்ளு மாவு, திராட்ைச, இளநீர், பானகம், ஆரஞ்சு பழம் போன்றவை அம்மனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும். அம்மனின் பச்சைப் பட்டினி விரதம் இனிதே நடைபெற வேண்டும் என்பதற்காக, மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்படும். இதனை 'பூச்சொரிதல்' என்பார்கள்.