மாதம் ரூ.4000 உதவித் தொகை.. சென்னை பார்த்தசாரதி கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
|அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 23-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் (வைகானச ஆகமம்) தங்கி கல்வி பயிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கொள்வதற்கான தகுதிகள்:
1. விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
2. குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. 01.07.2024 அன்று 14 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
பயிற்சி காலத்தில் உணவு, உடை, உறைவிடம் மற்றும் மாதம் ஒன்றுக்கு ரூ.4,000/- உதவித்தொகை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.07.2024 தேதி மாலை 5.45 வரை
விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், www.parthasarathy.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
துணை ஆணையர்/செயல் அலுவலர்/ தக்கார்,
அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில்,
திருவல்லிக்கேணி,
சென்னை- 600 005.