< Back
ஆன்மிகம்
திருஷ்டி நீக்கும் பரிகாரங்கள்
ஆன்மிகம்

திருஷ்டி நீக்கும் பரிகாரங்கள்

தினத்தந்தி
|
31 May 2023 9:44 AM IST

* தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு, அதன் வழியாக தேங்காய்க்குள் நவதானியங்களையும் போட்டு அடைக்க வேண்டும். பின்னர் தேங்காய் மீது சூடம் ஏற்றி வைத்து திருஷ்டி சுற்றி, முச்சந்தியில் உடைத்து வந்தால் திருஷ்டி நீங்கும்.

* காலபைரவர் கோவிலுக்குச் சென்று, இறைவனை மனமுருகி வணங்கி திரிசூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சைப் பழத்தை செருகி வைத்து வணங்கினால் செய்வினை திருஷ்டி அகலும்.

* இலுப்ப விதையை உடைத்து பொடியாக்கி, சாம்பிராணியுடன் கலந்து தூபம் காட்டினால், தீய சக்திகள் விலகும்.

* குன்றிமணியை உடைத்து பொடியாக்கி, சாம்பிராணியுடன் கலந்து தூபம் காட்டினாலும் தீய சக்திகள் அகன்று விடும்.

* நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள கொல்லிப்பாவை ஆலயத்திற்கு, வெள்ளி, செவ்வாய், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சென்று வழிபட்டு வந்தால் பில்லி சூனியம், செய்வினை, ஏவல் பிரச்சினைகள் அகலும்.

மேலும் செய்திகள்