< Back
ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருடசேவை
ஆன்மிகம்

சிரவண மாத பவுர்ணமி.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருடசேவை

தினத்தந்தி
|
20 Aug 2024 11:29 AM IST

சிரவண மாத பவுர்ணமியை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோவிலில் உபகர்மா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சிரவண மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று கருட சேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் நேற்று சிரவண உபகர்மா நிகழ்ச்சியும் நடந்தது. அதன் ஒரு பகுதியாக உற்சவர் ஸ்ரீகிருஷ்ணருக்கு வழிபாடு நடத்தப்பட்டு, மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஏழுமலையான் கோவிலில் இருந்து ஊர்வலமாக வராக சுவாமி கோவிலுக்குக் கொண்டு வந்து பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன்பிறகு ஸ்ரீகிருஷ்ணருக்கு புதிய யஜ்ஞோபவீதம் சமர்ப்பிக்கப்பட்டு, ஆஸ்தானம் நடந்தது. ஸ்ரீகிருஷ்ணர் ஊர்வலமாக கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்