< Back
ஆன்மிகம்
ஈரோடு
ஆன்மிகம்
பெருமுகை சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
|8 Sept 2023 4:17 AM IST
பெருமுகை சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் கள்ளிப்பட்டி அருகே பெருமுகை கிராமத்தில் அமைந்துள்ள சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் திருப்பதி திருமலை சஞ்சீவிராய பெருமாள் உக்கிர நரசிம்மர் 6-ம் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை சீர்வரிசை அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.