< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா
|7 July 2024 8:58 AM IST
வருகிற 14-ந் தேதி செப்பு தேரோட்டம் நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் பெரியாழ்வார் வீ்ற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு பெரியாழ்வார் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவில் ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி லட்சுமணன், ஆய்வாளர் முத்து மணிகண்டன், அறங்காவலர்கள், பட்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவினை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி செப்பு தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.