< Back
ஆன்மிகம்
பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஆன்மிகம்

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

தினத்தந்தி
|
9 March 2024 3:52 PM IST

இந்த ஆண்டு குண்டம் திருவிழா வருகிற 11-ம் தேதி பூச்சாற்றுடன் தொடங்குகிறது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள். இந்த ஆண்டு திருவிழா வருகிற 11-ம்தேதி பூச்சாற்றுடன் தொடங்குகிறது.

19-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) கம்பம் சாட்டுதல் விழா நடைபெறும், 26-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா நடைபெறும். 27-ம்தேதி பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெறும். 28-ம்தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 29-ம்தேதி தங்கத்தேர் உலாவும் நடைபெற உள்ளது.

பக்தர்களின் வசதிக்காக கோவிலை சுற்றியும் தெப்பக்குளம் செல்லும் வழியிலும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்