< Back
ஆன்மிகம்
பண்ணாரி அம்மன் கோவிலில்பக்தர்கள் ரூ.81¾ லட்சம் உண்டியல் காணிக்கை
ஈரோடு
ஆன்மிகம்

பண்ணாரி அம்மன் கோவிலில்பக்தர்கள் ரூ.81¾ லட்சம் உண்டியல் காணிக்கை

தினத்தந்தி
|
9 Feb 2023 3:44 AM IST

பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.81¾ லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனா்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மாதம் தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும். அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள 20 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா மற்றும் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சிவமணி ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியல்களில் மொத்தம் ரூ.81 லட்சத்து 84 ஆயிரத்து 831-ம், தங்கம் 460 கிராமும், வெள்ளி 960 கிராமும் இருந்தது. இந்த எண்ணிக்கையில் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன் மற்றும் ராஜாமணி தங்கவேல், பள்ளிக்கூட மாணவிகள் மற்றும் பக்தர்கள், வங்கி அலுவலர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்