< Back
ஆன்மிகம்
ராமநாதபுரம்
ஆன்மிகம்

திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தினத்தந்தி
|
28 March 2023 12:36 PM IST

திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் மிகவும் பிரசித்தி பெற்ற சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் உள்ளது.

இந்த நிலையில் திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் இந்த ஆண்டின் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவிலில் பெருமாள் சன்னதி எதிரே பிரகாரத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் பெருமாளின் உருவம் பதித்த கொடியேற்றப்பட்டு கொடிமரத்திற்கும் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த பெருமாளுக்கும் பூஜைகள் நடைபெற்றன.

கொடியேற்ற நிகழ்ச்சியில் திவான் பழனிவேல் பாண்டியன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி பங்குனி உத்திரத்தன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

மேலும் செய்திகள்