< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
|26 March 2024 11:21 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக இன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள், தாயார் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோரதத்துக்கு(தேருக்கு) வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரங்கா... கோவிந்தா... கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.