சிவராத்திரியில் தென்படும் 'பாஞ்சசன்ய சங்கு'
|‘பாஞ்சசன்ய சங்கு’ சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி, சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் அதிசயம் நிகழ்கிறது.
பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில், பாகல்பூர் என்ற இடத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மந்தர் மலை. கடற்கரையை ஒட்டி அமைந்த இந்த மலைப் பகுதியில் சங்கு குளம் ஒன்று இருக்கிறது.
இந்த மந்தர் மலையானது, அமிர்தம் பெறுவதற்காக அசுரர்களும், தேவர்களும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடலை கடைந்த இடம் என்று தல வரலாறு சொல்லப்படுகிறது. இந்த மலையில் அமைந்த சங்கு குளத்தில், ஒரு சங்கு இருக்கிறது. அது 'பாஞ்சசன்ய சங்கு' என்று அழைக்கப்படுகிறது.
இந்த சங்கானது, வருடம் முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்கும். சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி, சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் அதிசயம் நிகழ்கிறது. ஒரே நாளில் தண்ணீர் வற்றி சங்கு தென்படுவதும், மறுநாளே தண்ணீர் பெருக்கெடுத்து சங்கு மூழ்கிப்போவதும் வியப்புரிக்குரியதாக இருக்கிறதாம்.