பால் சங்கு தரும் பலன்கள்
|பால் சங்கை வீட்டில் வைத்து, விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்குவதாகவும், அஷ்ட ஐஸ்வர்யமும், சகல சவுபாக்கியமும் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சங்குகளில் பல வகைகள் இருக்கின்றன. சங்குகள் நல்ல சகுனத்தின் போது இசைக்கப்படும் கருவியாகவும் சொல்லப்படுகிறது. மகாபாரதத்தில், கிருஷ்ணர் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் என்று பலரும் தனித்தனியாக சங்கு வைத்திருந்தனர். மகாவிஷ்ணு எப்போதும் தன்னுடைய கரத்தில் சங்கு ஏந்தியபடிதான் அருள்பாலிக்கிறார்.
இதில் பால் சங்கு என்று ஒரு வகை உள்ளது. அந்த சங்கை வீட்டில் வைத்து, விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்குவதாகவும், அஷ்ட ஐஸ்வர்யமும், சகல சவுபாக்கியமும் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் கணவன்-மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும். இருவருக்குள்ளும் ஒற்றுமை பலப்படும்.
* பால் சங்கின் முன்பாக இரண்டு விளக்கை ஏற்றி வழிபட வேண்டும்.
* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய்க்கிழமை தோறும் இந்த சங்கில் விளக்கேற்ற வேண்டும். இதனால் செவ்வாய் தோஷம் விலகி, விரைவில் திருமணம் நடந்தேறும்.
* பால் சங்கின் முன்பாகவோ, அல்லது பால் சங்கிலோ விளக்கு ஏற்றி வழிபடுவதால், குபேரனின் அருள் கிடைக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டில் வாசம் செய்வாள்.
* வீட்டில் பில்லி, சூனியம் மற்றும் ஏவல்கள் நெருங்காது. வாஸ்து குறைகள் முழுவதும் நீங்கும். நினைத்த காரியம் எந்த தடையும் இன்றி நடந்தேறும்.
* கண் திருஷ்டி, வியாபார சரிவு, கடன் தொல்லை, தொழில் தொடங்குவதில் சிக்கல், எதிரிகள் தொல்லை அகலவும், கல்வியில் சிறந்து விளங்கவும், பால் சங்கு வழிபாடு பலன் தரும்.
* நவக்கிரகத்தில் உள்ள எந்த தெய்வத்தை நினைத்து வேண்டுமானாலும், பால் சங்கில் தீபமேற்றி வழிபடலாம். அது மட்டுமின்றி அவரவர் இஷ்ட தெய்வத்தையும் கூட நினைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம்.