< Back
ஆன்மிகம்
விஜயதசமியையொட்டி  கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஈரோடு
ஆன்மிகம்

விஜயதசமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
5 Oct 2022 8:58 PM GMT

விஜயதசமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு, அக்.6-

விஜயதசமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கொடுமுடி

கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி 9-ம் நாள் விஜயதசமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

முன்னதாக பெருமாளும், சிவனும் சேர்ந்து வன்னிமா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை பிரபு குருக்கள் மற்றும் ஸ்ரீதர் பட்டர் ஆகியோர் செய்தனர். இதையொட்டி மகுடேஸ்வரரும், வீரநாராயண பெருமாளும் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் செய்திருந்தார்.

கருக்கம்பாளையம்

இதேபோல் ஊஞ்சலூர் அருகே கருக்கம்பாளையத்தில் பழமையான பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் விஜயதசமியை ஒட்டி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. அம்மனுக்கு முன்பு உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டு இருந்தது. மாலையில் பெண்கள் லலிதாசகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் ஊஞ்சலூர் கனகதாரா ஆன்மிக நிலையத்தின் சார்பில் ஜெயக்குமார் சாமிகள் முன்னின்று குத்து விளக்கு பூஜையை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்