< Back
ஆன்மிகம்
சந்தானராமர் கோவிலில் நவராத்திரி விழா
திருவாரூர்
ஆன்மிகம்

சந்தானராமர் கோவிலில் நவராத்திரி விழா

தினத்தந்தி
|
25 Oct 2023 12:30 AM IST

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் 10 நாட்கள் நடந்த நவராத்திரி விழா விஜயதசமியுடன் நிறைவடைந்தது.விழா நாட்களில் சந்தானராமருக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது. விழாவில் சந்தானராமர் வித்யாலெட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று விஜயதசமி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மணிகண்டன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் நவராத்திரி விழா 10 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

மேலும் செய்திகள்