< Back
ஆன்மிகம்
Narasimhar brahmotsavam at Parthasarathy temple
ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவ விழா தொடங்கியது

தினத்தந்தி
|
18 Jun 2024 12:20 PM IST

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக 23-ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இந்த ஆண்டிற்கான நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரண்டாம் நாளான இன்று இரவு 7:45 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளியசிங்கர் அருள்பாலிக்கிறார். நாளை கருடசேவை உற்சவம் நடக்கிறது. விழாவின் நான்காம் நாள் சூரிய சந்திர பிரபை புறப்பாடும், 5ம் நாள் பல்லக்கு நாச்சியார் திருக்கோலமும், அன்று மாலையில் யோக நரசிம்மர் திருக்கோல புறப்பாடும், இரவு அனுமந்த வாகன புறப்பாடும் நடக்கிறது.

விழாவின் பிரதான நிகழ்வாக 23-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 4:30 மணி முதல் 5:15 மணிக்குள் உற்சவர் தேரில் எழுந்தருள்கிறார். அதன்பின்னர், காலை 7:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கும்.

மேலும் செய்திகள்