< Back
ஆன்மிகம்
நாகேஷ்வர் கோவில்
ஆன்மிகம்

நாகேஷ்வர் கோவில்

தினத்தந்தி
|
11 Aug 2023 8:23 PM IST

இந்தியாவில் உள்ள மிகவும் போற்றப்படும் சிவன் கோவில்களில் ஒன்றாக, ஜாம்நகரில் உள்ள நாகேஷ்வர் கோவில் திகழ்கிறது.

இது இந்தியாவில் அமைந்த சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது. இவ்வாலயம் இந்தப் பகுதியின் புனிதமான இடமாக கருதப்படுகிறது.

குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா பகுதியின் கடற்கரையில் துவாரகா நகரத்திற்கும், பெட் துவாரகா தீவுக்கும் இடையே உள்ள பாதையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இங்கு சுமார் 25 மீட்டா் உயரம் உள்ள அமர்ந்த நிலையிலான சிவபெருமானின் சிலை பார்ப்பவர்களின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு குளத்துடன் கூடிய பெரிய தோட்டம் இருக்கிறது. இது இங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியை வழங்கும் வகையில் உள்ளது. இங்கும் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

மேலும் செய்திகள்