நாகதோஷமா கவலைப்பட வேண்டாம்
|நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய புராதனக் கோவில்கள் பல உள்ளன.
அவற்றில் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், நாகர்கோவில், திருக்காளகஸ்தி, பேரையூர், நயினார்கோவில், ராமேஸ்வரம், திருச்செங்கோடு போன்றவை முக்கியமானவை. சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்கள், சர்ப்பத்தை மாலையாக அணிந்துள்ள தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும், சர்ப்ப விநாயகர் அருளும் ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம். சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.
ஜாதகத்தில் ராகு - கேது ஆதிக்கம் அமைந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 4, 7, 13, 16, 22, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், ராகு - கேது ஆதிக்க எண்களில் பிறந்தவர்கள் ஆகியோர் ஆதிசேஷனுக்குரிய பெயர்களை வைத்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் நாகப்பன், நாகம்மை, நாகராஜன், நாகமுத்து, நாகவள்ளி, நாகலிங்கம், நாகா, நாகரத்னம், நாகமணி போன்ற பெயர்களை வைப்பது வழக்கம். எண்கணிதப்படி ஆராய்ந்து நாகர் பெயர் வைத்துக் கொண்டால் பெருமை சேரும். எப்படி இருந்தாலும் தோஷங்களிலேயே பெரிய தோஷமாகக் கருதப்படும் நாகதோஷம் ஒருவருக்கு ஜாதகத்தில் இருக்குமானால், முறையாக வழிபாடு செய்வதன் மூலமே முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். சுய ஜாதகத்தின் அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு யோகம் தரும் ஆலயங்களில் வழிபாடுவது உகந்தது.