< Back
ஆன்மிகம்
செய்யூர் அருகே பைக்கில் காட்சியளித்த முத்துமாரியம்மன்
செங்கல்பட்டு
ஆன்மிகம்

செய்யூர் அருகே பைக்கில் காட்சியளித்த முத்துமாரியம்மன்

தினத்தந்தி
|
1 Aug 2022 7:39 AM IST

செங்கல்பட்டு அருகே பைக்கில் காட்சியளித்த முத்துமாரியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில் கிராம தேவதையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசிதிபெற்ற இக்கோவிலில் முத்துமாரியம்மனை தரிசனம் செய்ய செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருவர்.

இந்நிலையில் கிராம தேவதையான முத்துமாரியம்மனுக்கு பல்சர் பைக்கில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி ஆசி பெற்று சென்றனர்.

மேலும் செய்திகள்