< Back
ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசியக் கொடியுடன் முளைப்பாரி ஊர்வலம்
ஆன்மிகம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசியக் கொடியுடன் முளைப்பாரி ஊர்வலம்

தினத்தந்தி
|
11 Aug 2022 12:56 AM IST

ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆடி மாத முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆடி மாத முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 500 பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் முளைப்பாரி உடன் தேசிய கொடியையும் தலையில் வைத்து ஊர்வலம் பெண்கள் உற்சாகமாகச் சென்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. மாரியம்மன் கோவில் தெரு இத்தெருவைச் சுற்றிலும் ஊரணிபட்டி கீழப்பட்டி உள்ளிட்ட ஏழு தெருக்களில் வசிக்கும் சாலியர் சமூகத்தினர் முளைக்கொட்டு திருவிழாவை கொண்டாடுவது வழக்கம்.

இங்கு வசிக்கும் சுமார் ஐயாயிரம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இத்திருவிழாவை வெகு விமரிசையாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழாவானது நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆடி மாத முளைக்கொட்டு திருவிழாவானது கடந்த வாரம் தொடங்கி பெண்கள் விரதமிருந்து முளைப்பாரியை வீட்டில் வளர்த்து வந்தனர். இத்திருவிழாவின் இறுதி நாளான இன்று 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் சிலர் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக முளைப்பாரி மேல் தேசியக்கொடியை ஏந்திய வாறு மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி ஊர்வலமாக சென்று காமராஜர்சிலை வழியாக பட்டத்தரசி அம்மன் கோவிலில் முளைப்பாரியை கரைத்தனர். இவ்விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்