< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்; ஒரு லட்சம் பேருக்கு விருந்து - ஏற்பாடுகள் தீவிரம்

தினத்தந்தி
|
21 April 2024 6:34 AM IST

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பேருக்கு திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான மேடை அலங்கார பணிகள் சிறப்பாக நடைபெற்ற நிலையில், வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால் திருக்கல்யாண மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல்களும், 20 எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கிலோ அரிசி, 7 டன் காய்கறிகளைக் கொண்டு சமையல் பணிகள் நடைபெற்றன. இந்த சமையல் பணிகளை மாவட்ட உணவுத்துறை ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.


மேலும் செய்திகள்