< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
வெகுவிமர்சையாக நடைபெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோவில் தேரோட்டம்
|12 July 2022 3:17 PM IST
அருப்புக்கோட்டையில் 2 வருடங்களுக்குப் பின் நடைபெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 1 ஆம் தேதி துவங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
தேரோட்டத்தினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வடம் பிடித்து துவக்கி வைத்தார். மீனாட்சி சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரில் வலம் வந்த மீனாட்சி சொக்கநாதரை வழிபட்டு மகிழ்ந்தனர்.
கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேரோட்டத்தினை காண அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.