தூத்துக்குடி
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய தேர் பவனி திரளானவர்கள் கும்பிடுசேவை செய்து வழிபட்டனர்
|காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய திருவிழா தேர் பவனி நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டு தேரின் முன்பாக கும்பிடுசேவை செய்து வழிபட்டனர்
கோவில்பட்டி:
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய திருவிழா தேர் பவனி நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டு தேரின் முன்பாக கும்பிடுசேவை செய்து வழிபட்டனர்.
புனித பரலோக மாதா ஆலயம்
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் திருப்பலி நடந்தது.
விழாவின் சிகர நாளான நேற்று அதிகாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமி தலைமையில் தேரடி திருப்பலி நடந்தது.
தேர் பவனி
தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது. தேரின் முன்பாக பல ஆயிரக்கணக்கானவர்கள் கும்பிடுசேவை நடத்தி வழிபட்டனர். காலை 6 மணிக்கு பாளை. சமூக பணியக செயலாளர் மைக்கேல், பாளை. மறைமாவட்ட பொறியாளர் எஸ்.ராபின் ஆகியோரும், காலை 8 மணிக்கு அம்பை பங்குதந்தை அருள் அம்புரோஸ், பாளை. மறைமாவட்ட திட்ட அலுவலர் தீபக் மைக்கேல் ராஜ் ஆகியோரும் திருப்பலி நடத்தினர்.
காலை 10 மணிக்கு மண்ணின் மைந்தர்களும், மதியம் 12 மணிக்கு தருவைகுளம் பங்குதந்தை வின்சென்ட், தூத்துக்குடி பங்குதந்தை ஜெரோசின் கத்தார் ஆகியோரும் திருப்பலி நிறைவேற்றினர். மதியம் 2 மணிக்கு பட்டாகுறிச்சி குரு மாணவர் இல்ல அதிபர் ஜாய் கல்லறக்கல் மலையாளத்திலும், மாலை 4 மணிக்கு வாரணாசி என்.பிரான்சிஸ் வியாகப்பன் இந்தியிலும் திருப்பலி நடத்தினார்கள். மாலை 6 மணிக்கு பாளை. சவேரியார் கலைமனைகள் சேசு சபை அருட்தந்தையர் திருப்பலி நடத்தினர். தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது. விழாவில் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ், உதவி பங்குத்தந்தை ஜெரால்டு ரீகன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.