< Back
ஆன்மிகம்
மாசிமக தீர்த்தவாரி.. புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள்
ஆன்மிகம்

மாசிமக தீர்த்தவாரி.. புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள்

தினத்தந்தி
|
24 Feb 2024 4:56 PM IST

தீர்த்தவாரிக்காக கடற்கரையில் அணிவகுத்த உற்சவ மூர்த்திகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசித்தனர்.

புதுச்சேரி:

மாசிமகத்தை முன்னிட்டு புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், திண்டிவனம் நல்லிய கோடான் நகர் ஸ்ரீஅலர்மேல் மங்கா சமேத சீனிவாசபெருமாள், உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உற்சவமூர்த்திகள் நேற்றே புதுவை வந்தனர்.

அவர்களுக்கு புதுவையின் பல்வேறு பகுதிகளில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை உற்சவமூர்த்திகள் வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரிக்காக எழுந்தருளினாரகள்.

புதுவை மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள், ராமகிருஷ்ணாநகர் லட்சுமி ஹயக்கிரீவர், எம்.எஸ். அக்ரகாரம் வீர ஆஞ்சநேயர் உள்பட பல்வேறு கோவில்களி இருந்து 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

தீர்த்தவாரியில் பங்குபெற்ற உற்சவர்கள் கடற்கரையில் அணிவகுத்தனர். காலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கடற்கரைக்கு வந்து உற்வசவர்களை தரிசித்தனர்.

அவர்கள் கடலில் புனித நீராடினார்கள். கடலுக்குள் வெகுதொலைவில் சென்று குளிக்காதவாறு பாதுகாவலர்கள் அவர்களை கட்டுப்படுத்தினார்கள்.

தீர்த்தவாரியை முன்னிட்டு புதுவை நகரப்பகுதி முழுவதும் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பிற்பகலில் உற்சவமூர்த்திகள் தங்களது கோவில்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்