< Back
ஆன்மிகம்
21 அடி மலேசியா பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆன்மிகம்

21 அடி மலேசியா பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
4 Jun 2022 10:03 AM IST

திருவண்ணாமலை அருகே புதிதாக கட்டப்பட்ட 21 அடி மலேசியா பாலமுருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள பெரியகொழப்பலூர் நாராயணமங்கலம் இடையே கந்தர்வ மலை உள்ளது. மலைமீது 21 அடி உயர மலேசியா பாலமுருகன் சிலை புதிதாக கட்டப்பட்டு இதன் கும்பாபிஷேக விழா நடந்தது.

கோவிலின் முன்பு யாகசாலையில் 3 யாக குண்டங்கள் அமைத்து. 108 கலசம் வைத்து கோ பூஜை, பூர்ணாஹுதி, சகஸ்ரநாமம் ஆகிய மூன்று கால யாக பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்துகொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தை மேளதாளங்கள் முழங்க மலை மீது உள்ள 21அடி மலேசியா பால முருகன் சிலை மீது ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரைதெளித்தனர்.

மேலும் செய்திகள்