< Back
ஆன்மிகம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிவில் நாளை மகா கும்பாபிஷேகம்
நாமக்கல்
ஆன்மிகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிவில் நாளை மகா கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
31 Oct 2023 12:41 PM IST

கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை (நவம்பர் 1) மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெறுகிறது.

இதையொட்டி கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. இன்று காலையில் வருண தீர்த்தம், புனிதபடுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, அனுதின பெருவேள்வி, மகாசாந்தி ஹோமம், அதிவாச ஹோமம், வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், அருட்பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாளை காலை காலை 10.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஞ்சநேயர் பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீயணைப்பு, சுகாதாரம், வருவாய், போக்குவரத்து துறை, நகராட்சி, காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் கும்பாபிஷேகத்துக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துள்ளன.

மேலும் செய்திகள்