< Back
ஆன்மிகம்
மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண தரிசனம் - டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
ஆன்மிகம்

மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண தரிசனம் - டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

தினத்தந்தி
|
9 April 2024 7:33 PM IST

மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

மதுரை,

மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 11-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. திருக்கல்யாணத்தில் பங்கேற்று தரிசிக்க விரும்பும் பக்தா்கள் 200, 500 ரூபாய் செலுத்தி டிக்கெட்டுகளை பெற வேண்டும்.

மேலும், பக்தா்களின் வசதிக்காக அறநிலையத்துறை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. திருக்கல்யாணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் வருகிற 13-ந்தேதி இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்