< Back
ஆன்மிகம்
கலங்காமல் காத்த விநாயகர்
ஆன்மிகம்

கலங்காமல் காத்த விநாயகர்

தினத்தந்தி
|
19 Sept 2023 12:42 PM IST

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருத்தலம், புராண காலத்தில் 'திருஇரும்பூளை' என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த தலத்தில் 'கலங்காமல் காத்த விநாயகர்' அருள்பாலித்து வருகிறார். ஒரு முறை விநாயகருக்கும்,

கஜமுகாசுரனுக்கும் கடும் போர் ஏற்பட்டது. கஜமுகன் ஆட்சி செய்த மதங்க புரத்தை, விநாயகர் முற்றுகையிட்டார். அசுரன் விட்ட பாணங்களை எல்லாம் தன் கரத்தில் இருந்த உலக்கையால் விலக்கி, அதனைக் கொண்டே அசுரனின் மார்பில் விநாயகர் அடித்தார். அவன் மயங்கி வீழ்ந்தான், ஆனால் இறக்கவில்லை. அவன் ஆயுதங்களால் இறக்காதவன் என்பதை அறிந்த விநாயகர், தன்னுடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். இதனால் பயந்து போன கஜமுகன், பெருச்சாளி உருவம் கொண்டான். அவனை அடக்கி, காத்து இன்பம் அளித்ததால், இத்தல விநாயகருக்கு, 'கலங்காமல் காத்த விநாயகர்' என்று பெயர் வந்தது. அகரன் அடங்கிய பிறகு, அதுவரை அவனுக்கு செய்து வந்த தோப்புகரணம், தலையில் குட்டிக் கொள்ளுதல், தேங்காய் உடைத்தல் ஆகியவற்றை பிள்ளையாருக்கு செய்து மக்கள் வழிபட ஆரம்பித்தனர். இந்த விநாயகரை தொடர்ந்து பல வாரங்கள் வழிபட்டால் எதிரிகள் பயம் நீங்கும் என்பது மக்கள் நம்பிக்கை.

மேலும் செய்திகள்