< Back
ஆன்மிகம்
27 Nakshatras And Their Lords
ஆன்மிகம்

வாழ்க்கையில் வளம் அருளும் ஜென்ம நட்சத்திர தெய்வங்கள்

தினத்தந்தி
|
8 July 2024 12:02 PM GMT

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை இருக்கின்றனர். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நாம் பிறக்கும்போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கும் தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை இருக்கின்றனர். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி - ஸ்ரீ துர்காதேவி (அஷ்டபுஜம்)

கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப்பெருமான்)

ரோகிணி - ஸ்ரீகிருஷ்ணர் (விஷ்ணு)

மிருகசீரிடம்- ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவபெருமான்)

திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம் - ஸ்ரீராமர் (விஷ்ணு)

பூசம் - ஸ்ரீதட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)

ஆயில்யம்- ஸ்ரீஆதிசேசன் (நாகம்மாள்)

மகம்-ஸ்ரீசூரிய பகவான் (சூரிய நாராயணர்)

பூரம்- ஸ்ரீஆண்டாள் தேவி

உத்திரம் - ஸ்ரீ மகாலட்சுமி தேவி

அஸ்தம்- ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம் - ஸ்ரீமுருகப் பெருமான்

அனுசம்- ஸ்ரீலட்சுமி நாராயணர்

கேட்டை - ஸ்ரீவராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

மூலம் - ஆஞ்சநேயர்

பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

உத்திராடம் - ஸ்ரீ விநாயகப் பெருமான்

திருவோணம்- ஸ்ரீஹயக்கிரீவர் (விஷ்ணு)

அவிட்டம் - ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)

சதயம் - ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

உத்திரட்டாதி - ஸ்ரீமகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

மேலும் செய்திகள்