< Back
ஆன்மிகம்

ஆன்மிகம்
திருப்பதி கபிலேஸ்வரருக்கு லட்ச வில்வார்ச்சனை.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

1 Dec 2023 11:29 AM IST
உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நேற்று லட்ச வில்வார்ச்சனை நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடந்தது. அதன்பிறகு காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஒரு லட்சம் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்பட்டது.
மாலையில் உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.