< Back
ஆன்மிகம்
கடலூர்: வேதவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆன்மிகம்

கடலூர்: வேதவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
5 July 2022 8:24 AM IST

கடலூரில் வேதவிநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் கருமாரப்பேட்டை தெருவில் வேதவிநாயகர், வேதமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலை இடித்து விட்டு, புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி இக்கோவில் புதிதாக கட்டும் பணிகள் முடிவடைந்தது.

இந்நிலையில் இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 2-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, லட்சுமி பூஜை, தன பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால யாக பூஜை நடந்தது.

கடந்த 3-ம் தேதி 2-ம் கால யாக பூஜை, புதிய விக்ரகங்கள், கரிகோலம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்று மாலை 3-ம் கால யாக பூஜை, சாமி பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல், பூர்ணாகுதி நடைபெற்றது. நேற்று வேத, திருமுறை பாராயணம், 4-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, கடம் புறப்பாடு நடந்தது.

இதில் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது தெரு முக்கியஸ்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து வேதவிநாயகர், வேதமுத்து மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்