< Back
ஆன்மிகம்
வெள்ளோடு அருகே  பழமையான சடையப்ப சாமி கோவில் கும்பாபிஷேகம்
ஈரோடு
ஆன்மிகம்

வெள்ளோடு அருகே பழமையான சடையப்ப சாமி கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
3 March 2023 9:00 PM GMT

வெள்ளோடு அருகே நடந்த பழமையான சடையப்ப சாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

சென்னிமலை

வெள்ளோடு அருகே நடந்த பழமையான சடையப்ப சாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

சடையப்பசாமி

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் தென்முகம் வெள்ளோடு கிராமத்துக்கு உட்பட்ட பள்ளபாளையத்தில் கொங்கு நாடார் சமூகத்தின் பல்லங்குலம் மற்றும் பவளத்தான் குலம் ஆகிய 2 குலத்தவர்களுக்கு சேர்ந்த சடையப்ப சாமி கோவில் உள்ளது.

சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் புனரமைப்பு செய்யப்பட்டு திருஉருவ சுதை சிற்பங்களுடன் 23 அடி உயரம் கொண்ட கோபுரம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 16-ந் தேதி காலையில் யாகசாலைக்கு பாலக்கால் போடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

கும்பாபிஷேகம்

1-ந் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரிகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அன்று இரவு கோபுர சுதை மற்றும் சிற்பங்களுக்கு கண் திறக்கப்பட்டு கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிகாலை 5 மணிக்கு மேல் ராஜ கணபதி வழிபாடு, நாடி சந்தானம், கலசங்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளும் பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து விநாயகர், சடையப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

Related Tags :
மேலும் செய்திகள்