< Back
ஆன்மிகம்
சென்னை
ஆன்மிகம்
முத்துமாரி கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு
|29 Aug 2022 7:23 PM IST
சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டன் முத்துமாரி கெங்கையம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துதல், தேர் மற்றும் குளங்கள் புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்ததுதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டன், முத்துமாரி கெங்கையம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம். கே. மோகன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் ந. தனபால் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.