< Back
ஆன்மிகம்
சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பெண் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
திருப்பூர்
ஆன்மிகம்

சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பெண் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

தினத்தந்தி
|
11 Jun 2022 10:21 PM IST

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பெண் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காங்கயம்,

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பெண் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில்

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது.

சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைக்க உத்ததரவிடுவார். அப்பொருள் பெட்டியில் வைத்து பூஜை செய்வது தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது.

இப்பெட்டியில் வைக்கப்படும் பொருளானது சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பக்தர்களிடையே நம்பப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக அமாவாசை, தமிழ் வருட பிறப்பு, வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டத்தால் கோவில் நிரம்பி வழியும்.

உடை கட்டுப்பாடு

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில் பெண்கள் ஆடை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று திடீரென நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இதில் துப்பட்டா இல்லாத உடை மற்றும் லெக்கின்ஸ் உடையில் பெண்கள் கோவிலுக்குள் வர அனுமதியில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் பலரும் பார்த்துச்சென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்