< Back
ஆன்மிகம்
நினைத்ததை நிறைவேற்றும் பைரவர்
ஆன்மிகம்

நினைத்ததை நிறைவேற்றும் பைரவர்

தினத்தந்தி
|
4 Aug 2022 6:17 PM IST

திருமயம் கோட்டையின் தென்புற பிரதான வாசலில் சக்தி விநாயகர், ஆஞ்சநேயர் சன்னிதிகளும், கோட்டையின் வடபுற சுவற்றில் கோட்டை பைரவர் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

கோட்டையின் காவல் தெய்வமாக கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்த கோட்டையை இவர் பாதுகாப்பதால் 'கோட்டை பைரவர்' என அழைக்கப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும். நீண்ட நாட்கள் தீராத பிரச்சினை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய, இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். தேய்பிறை அஷ்டமி தினத்தில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.

பைரவருக்கு பூசணிக்காயில் தீபம், இலுப்பை எண்ணெயில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். கண் திருஷ்டி நீங்கும். சனி தோஷம், பில்லி சூனியம் நீங்க, தொழில் பிரச்சினை தீர, திருமண தடை அகல கோட்டை பைரவரை வழிபட்டால் பலன் கிடைக்கும். இந்த வழியாக கடந்து செல்பவர்கள் பெரும்பாலும் பைரவரை வழிபட்டே செல்வார்கள். செல்லும் பயணம், காரியம் வெற்றிகரமாக அமைய இவரை நினைத்து தரிசனம் செய்கிறார்கள்.

மேலும் செய்திகள்